சிந்தித்து செயலாற்றுங்கள்
UPDATED : மே 13, 2022 | ADDED : மே 13, 2022
உறவினர், நண்பர்கள் இடையே சண்டை ஏற்படுவது இயல்பு. அப்படி இருக்கும்போது பலர் அவர்களை சமாதானம் செய்வர். சிலரோ இதைப்பார்த்தவுடன் மகிழ்ச்சி அடைவர். இப்படிப்பட்டவரா நீங்கள்... அதை மாற்ற வேண்டியது அவசியம். பிறர் படும் துன்பத்தை கண்டு சிரிப்போருக்கு மறுமை நாளில் கொடிய தண்டனை கிடைக்கும். இது தேவைதானா என சற்று சிந்தித்து செயலாற்றுங்கள்.