உள்ளூர் செய்திகள்

அறியாமல் செய்யும் தானம்

ஒருவர் பழ மரங்களும், இன்னொருவர் நெல் பயிரும் மற்றொருவர் தானியங்களும் பயிர் செய்துள்ளனர். ஒவ்வொருவருக்கும் இப்படி அமைவதே இறைவன் கொடுத்த வரம் தான். ஏனெனில், இப்படிப்பட்டவர்கள் தங்களை அறியாமலே தானம் செய்கிறார்கள். கரும்பு வைத்துள்ள இடத்தை தேடி எறும்புகள் வருகின்றன. தானியங்களை அள்ளிய பிறகு, அங்கே சிதறியவற்றை பறவைகள் உண்கின்றன. அங்குள்ள ஊழியர்கள் சம்பளத்துடன் இலவசமாகவும் இவற்றை பெறுகின்றனர். இப்படி அறிந்தும் அறியாமலும் செய்யப்படும் தானங்கள் நமது கணக்கில் வரவு வைக்கப்படுகின்றன.இத்தகைய தானங்கள் பற்றி நாயகம் கூறும் போது, “ஒரு விவசாயியின் விளை பொருளை எடுத்து பறவைகள், மனிதர்கள், பிராணிகள் சாப்பிட்டால் அந்த மனிதருடைய கணக்கில் அது 'ஸதகாவாக' (தர்மம்) கணிக்கப்படுகிறது,” என்கிறார்.