மற்றவர் உணர்வை மதிப்போம்
UPDATED : ஜூலை 20, 2018 | ADDED : ஜூலை 20, 2018
''பூண்டு வெங்காயத்தை சாப்பிட்டு விட்டு, பள்ளிவாசலுக்குள் நுழையாதீர்கள்,'' என நபிகள் நாயகம் அவர்கள் ஒருமுறை கட்டளையிட்டார்கள். பூண்டு, வெங்காயம் கொழுப்பைக் குறைக்கும் மருத்துவ குணம் மிக்க நல்ல பொருள் என்றாலும், அதன் மணம் கொஞ்சம் முகம் சுருக்க வைக்கும். தொழ வருபவர்களில் அந்த 'வாடை' பிடிக்காதவர்களின் மனதில் இது சஞ்சலம் தரலாம் என்பதற்காகவே இப்படி வேண்டுகோள் வைத்தார். சுவாசக்காற்று கூட பிறர் மனம் நெருடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டுமென நபிகள் விரும்பினார். பூண்டுவாடையே பிறரைப் பாதிக்கக்கூடாது என்றால், பிறருடைய மன உணர்வுகளை எந்த அளவுக்கு மதிக்க வேண்டுமென்பதை சொல்லத் தேவையில்லை.