படைப்பில் சிறந்தவர் யார்
UPDATED : ஜூலை 20, 2018 | ADDED : ஜூலை 20, 2018
மனிதர்களை அல்லாஹ் மிக கண்ணியமாகவே படைத்து, சகல வசதிகளையும் நிறைத்திருக்கிறான். அதுபோலவே மனிதர்கள் தங்களுக்குள் கண்ணியம் பாராட்டுதலையே அல்லாஹ் விரும்புகிறான்.குர்ஆனில்,''நிச்சயமாக நாம் ஆதமுடைய சந்ததியினரை (மனிதர்களை) கண்ணியப்படுத்தினோம். அவர்களுக்காக நல்ல உணவும் பொருட்களும் அளித்து, நாம் படைத்துள்ள படைப்புகள் பலவற்றையும் விட அவர்களைத் தகுதியில் மேன்மைப்படுத்தினோம்' என அல்லாஹ் கூறுகின்றான்.''நாம் பூமியில் உங்களை அனைத்து அதிகாரங்களுடனும் வாழச்செய்கிறோம். மேலும் அங்கே உங்களுக்கு வாழ்க்கை வசதிகளையும் அமைத்துத் தந்தோம்,'' என்கிறான் இறைவன்.இப்படி மனிதப் படைப்பை சிறந்த படைப்பாகப் படைத்து இவ்வுலகிற்கு அல்லாஹ் அனுப்பி வைத்துள்ளான். அதை உணர்ந்து செயல்படுவது நம் கடமை.