சிறகை விரிப்போமா...
UPDATED : ஜூன் 27, 2022 | ADDED : ஜூன் 27, 2022
பிரச்னை இல்லாத மனிதர்கள் யாருமில்லை. அவரவருக்கு ஏற்ப பிரச்னை இருக்கத்தான் செய்யும். மனம் திடமாக இருந்தால் பருந்து போல பிரச்னைக்கு தீர்வு காணலாம். வயதான காலத்திலும் பருந்து, தன் முதுமையை எண்ணி கவலைப்படாது. ஆயுளை நீடிக்கும் ஆசையுடன் மலை சிகரத்தை நோக்கி தனிமையை நாடிச் செல்லும். தன் அலகால் இறக்கை, நகங்களை கொத்தி அப்புறப்படுத்தும். அவை வளரும் வரை காத்திருக்கும். மீண்டும் புதிய பறவையாக தன் இருப்பிடத்தை வந்தடையும். அதுபோல பிரச்னையைக் கண்டு கலங்காதீர்கள். அறிவு என்னும் சிறகை விரியுங்கள். தீர்வு கிடைக்கும்.