காலையில் விழித்திடு
UPDATED : மார் 29, 2019 | ADDED : மார் 29, 2019
“என்னைப் பின்பற்றுவோருக்கு அன்றாடம் சிறப்பான நேரம் ஒன்று இருக்கிறது. அப்போது தொழுகை செய்தால் அபிவிருத்தி ஏற்படும்” என நபிகள் நாயகம் தெரிவித்தார்.“அது எந்த நேரம்?” எனக் கேட்டார் தோழர் ஒருவர். “சூரியன் உதிக்கும் நேரம்” என பதிலளித்தார். எனவே அதிகாலையில் நடக்கும் 'பஜ்ர்' என்னும் தொழுகை நேரத்தில் யாரும் துாங்க கூடாது.