மேலும் செய்திகள்
தனி உதவியாளர் நியமித்து வசூல் நடத்தும் அதிகாரி!
21-Jun-2025
ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப வளர்ச்சி தொடர்பான கருத்தரங்கு, திருப்பூர் இந்திய கம்யூ., கட்சி அலுவலகத்தில் நடந்தது. இதில், அக்கட்சியின் தொழிற்சங்கமான, ஏ.ஐ.டி.யு.சி.,யின் தேசிய மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.சங்கத்தின் மாநில பொருளாளர் பீட்டர் துரைராஜ் பேசுகையில், 'செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பார்த்து பயப்பட வேண்டாம். அதனால், வேலை வாய்ப்புக்கு பாதிப்பு ஏற்பட்டால், ஏ.ஐ.டி.யு.சி., சும்மா இருக்காது. இருப்பினும், தொழில் வாய்ப்பு பெருகும் என்பதால், தொழிலாளர்கள் அதற்கு ஏற்ப திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்.'ஏ.ஐ., என்றாலே அச்சப்பட வேண்டாம். முருகர் படத்தில் இருக்கும், 'யாமிருக்க பயமேன்' என்பது போல, எப்போதும் உங்களுக்கு பக்கபலமாக, ஏ.ஐ.டி.யு.சி., இருக்கும்' என்றார்.மூத்த நிருபர் ஒருவர், 'ஏ.ஐ.டி.யு.சி., இருக்க, ஏ.ஐ., பயமேன்னு சொல்றாரோ...' என, 'கமென்ட்' அடிக்க, சக நிருபர்கள் சிரித்தனர்.
21-Jun-2025