மேலும் செய்திகள்
ரசிகர் மன்றங்கள் என்ன செய்கின்றன?
23-Sep-2024
'காலம் கடந்த பின் இவருக்கு ஞானோதயம் ஏற்பட்டுள்ளது...' என, தெலுங்கானா முன்னாள் முதல்வரும், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவை கிண்டல் அடிக்கின்றனர், இங்குள்ள காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள். இங்கு, முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. சட்டசபை தேர்தலிலும், லோக்சபா தேர்தலிலும் ஏற்பட்ட படுதோல்வியில் இருந்து சந்திரசேகர ராவ் இன்னும் மீளவில்லை. ஆட்சியை பறிகொடுத்த வேகத்திலேயே, அவரது மகள் கவிதாவை மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சி.பி.ஐ., கைது செய்தது. நீண்ட சட்ட போராட்டத்துக்கு பின், சமீபத்தில் தான் அவர் ஜாமினில் வந்துள்ளார். அதற்குள், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியைச் சேர்ந்த, 10 எம்.எல்.ஏ.,க்கள் காங்கிரசுக்கு தாவி விட்டனர். மீதமுள்ள, 28 பேர் எப்போது வேண்டுமானாலும் ஓட்டம் பிடிக்கலாம் என்ற சூழல் நிலவுகிறது.இன்னும் சில மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் நடக்கவுள்ளது. தற்போதுள்ள சூழல் நீடித்தால் முதலுக்கே மோசம் வந்து விடும் என்பதை உணர்ந்த சந்திரசேகர ராவ், மாநிலம் முழுதும் பஸ்சில் சுற்றுப் பயணம் செய்து, கட்சி தொண்டர்களை சந்திக்க முடிவு செய்துள்ளார். தொண்டர்களிடம் கலந்துரையாடுவதுடன், அவர்களது குறைகளையும் கேட்க முடிவு செய்துஉள்ளார். இதை கிண்டலடிக்கும் காங்கிரஸ் கட்சியினர், 'சந்திரசேகர ராவ் இனி எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும் கட்சியை மீட்க முடியாது...' என்கின்றனர்.
23-Sep-2024