மேலும் செய்திகள்
கருணை காட்டுவாரா மோடி?
10-Jul-2025
'தேர்தல் தேதி அறிவிப்பு வருவதற்கு முன்பே, இலவச மழை பொழிய துவங்கி விட்டதே...' என, ஆச்சரியப்படுகின்றனர், பீஹார் மாநில மக்கள். இங்கு, முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. சட்டசபை தேர்தலுக்கான தேதியும், விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்காக, முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஆளும் கூட்டணி, மக்களை கவரும் வகையிலான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. 'மாதந்தோறும், 120 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்; இதன் வாயிலாக, 1.67 கோடி வீடுகளுக்கு பயன் கிடைக்கும். 'இந்த சலுகையால், அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டாலும், மக்கள் நலன் கருதி, அந்த இழப்பை அரசே ஏற்றுக்கொள்ளும்...' என, நிதிஷ் குமார் சமீபத்தில் அறிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்பு, எதிர்க்கட்சியினரான லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 'தேர்தல் தேதி அறிவித்து விட்டால், இதுபோன்ற வாக்குறுதிகளை அளிக்க முடியாது என்பதால், இப்போதே நிதிஷ் குமார் சலுகையை அறிவிக்கத் துவங்கி விட்டார். 'தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்குள், இதுபோன்று இன்னும் எத்தனை அறிவிப்புகள் வெளியாகுமோ... மக்களுக்கு கொண்டாட்டம் என்றாலும், நமக்கு திண்டாட்டம் தான்...' என, புலம்புகின்றனர் எதிர்க்கட்சியினர்.
10-Jul-2025