உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / ‘மீண்டும் முக்கியத்துவம்!’

‘மீண்டும் முக்கியத்துவம்!’

‘அடுத்த ரவுண்டுக்கு தயாராகி விட்டார் போலிருக் கிறது...’ என, முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ., வைச் சேர்ந்தவருமான ஸ்மிருதி இரானி குறித்து கூறுகின்றனர், உத்தர பிரதேச மாநில பா.ஜ., நிர்வாகிகள். ஸ்மிருதி இரானி, 2014ம் ஆண்டு முதலே, பா.ஜ.,வில் செல்வாக்கு மிக்க தலைவியாக வளரத் துவங்கினார்; மத்திய அமைச்சர் பதவியும் அவரை தேடி வந்தது. 2019 லோக்சபா தேர்தலில், உத்தர பிரதேச மாநிலம் அமேதியில் காங்கிரஸ் கட்சியின் ராகுலை, ஸ்மிருதி இரானி தோற்கடித்தார். இதனால், மீண்டும் மத்திய அமைச்சரவையில் இடம்பிடித்தார். ஆனால், 2024ல் அமேதியில் நடந்த லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்தார். இதனால், மத்திய அமைச்சர் பதவியையும் இழந்தார். கடந்த ஒன்றரை ஆண்டு களாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார். இந்நிலையில், சமீபத்தில் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த சில முக்கிய தலைவர்கள், பா.ஜ.,வில் இணைந்தனர். வழக்கமாக இதற்கான விழாக்கள், டில்லியிலோ, உ.பி., தலைநகர் லக்னோவிலோ தான் நடக்கும். ஆனால், இந்த விழா அமேதியில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக, பா.ஜ., சார்பில் ஸ்மிருதி பங்கேற்றார். இதையடுத்து, ‘அடுத்தாண்டு துவக்கத்தில் உ.பி.,யில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதில், ஸ்மிருதிக்கு முக்கியத்துவம் அளிக்க, பா.ஜ., தலைமை திட்டமிட்டுள்ளது. அதனால் தான், மீண்டும் அமேதிக்கு வந்துள்ளார் ஸ்மிருதி...’ என்கின்றனர், உ.பி., மாநில பா.ஜ.,வினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ