உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / அடிமை சிக்கி விட்டது?

அடிமை சிக்கி விட்டது?

'உத்தவ் தாக்கரேயும், அவரது ஆதரவாளர்களும் இனி என்னென்ன கிண்டலடிக்கப் போகின்றனரோ என நினைத்தால் கலக்கமாக இருக்கிறது...' என கண்ணீர் வடிக்கிறார், மஹாராஷ்டிரா துணை முதல்வரும், சிவசேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டே.உத்தவ் தாக்கரே தலைமையில் இருந்த சிவசேனாவை இரண்டாக உடைத்து, கட்சியையும், சின்னத்தையும் தன் வசப்படுத்திய ஏக்நாத் ஷிண்டே, பா.ஜ., ஆதரவுடன் முதல்வராகவும் பதவி வகித்தார்.சமீபத்தில் நடந்த மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில், பா.ஜ., அதிகமான இடங்களில் வெற்றி பெற்றதால், இந்த முறை, முதல்வர் பதவியை ஷிண்டேவுக்கு விட்டுத் தர, அந்த கட்சி மறுத்து விட்டது.ஷிண்டே எவ்வளவோ பிடிவாதம் பிடித்தும், பா.ஜ., தலைவர்கள் மசியவில்லை. இதனால், பா.ஜ.,வின் தேவேந்திர பட்னவிஸ் முதல்வராக பதவியேற்றார். ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் பதவியுடன் திருப்தி அடைய நேரிட்டது.இதற்காகவே காத்திருந்த உத்தவ் தாக்கரேயும், அவரது ஆதரவாளர்களும், ஷிண்டேயை கிண்டல் அடிக்கத் துவங்கி விட்டனர். 'ஷிண்டே அணியின் ஆதரவு இல்லாவிட்டாலும், பா.ஜ.,வால் ஆட்சியை தொடர முடியும். இனி, ஷிண்டே ஒரு செல்லாக்காசு...' என, கேலி பேசுகின்றனர்.'ஏற்கனவே என்னை, 'பா.ஜ.,வுக்கு ஒரு அடிமை சிக்கி விட்டது' என, உத்தவ் தாக்கரே கூறுகிறார். இனி, என்னவெல்லாம் பேசுவாரோ...' என புலம்புகிறார், ஏக்நாத் ஷிண்டே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ellar
டிச 09, 2024 16:01

இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது தமிழகத்தில் ஒரு காலத்தில் நடிகர் விஜயகாந்த் ஆன மாதிரி இவரும் அங்கு ஆளுங்கட்சிக்கு ஆதரவான எதிர்க்கட்சித் தலைவராக ஆகிவிட வேண்டியது தானே என்ன குழப்பம்


நிக்கோல்தாம்சன்
டிச 09, 2024 14:15

அவராவது எதிர்க்கட்சி தலைவர் என்றும் அமரலாம் உத்தவ் , ஆனால் நீ ?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை