மேலும் செய்திகள்
டில்லி உஷ்ஷ்ஷ்: அமைச்சர்களுக்கு பிரதமர் அறிவுரை
05-Jan-2025
ஊர்க்குருவி பருந்து ஆகுமா?
02-Jan-2025
'நல்ல திட்டம் தான்; ஆனால், இதற்கு கட்சிக்காரர்களின் ஒத்துழைப்பு கிடைக்குமா...' என, தெலுங்கானா முதல்வரான ரேவந்த் ரெட்டியின், 'ஐடியா' குறித்து பேசுகின்றனர், அங்குள்ள மக்கள்.தெலுங்கானாவில், ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்., அரசு பதவியேற்று, ஓராண்டு முடிந்து விட்டது. இதையடுத்து, ஆட்சி அதிகாரத்தில் சில மாற்றங்களை செய்ய நினைக்கிறார், முதல்வர் ரேவந்த் ரெட்டி. தற்போது அமைச்சரவையில் உள்ள, 11 பேரையும் மாற்றிவிட்டு, புதிதாக 11 பேரை அமைச்சர்களாக்க திட்டமிட்டுள்ளார். இதன் வாயிலாக, கட்சியில் புதிதாக 11 பேருக்கு வாய்ப்பு கிடைப்பதுடன், வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற புதிய ஆலோசனைகள் கிடைக்கும் எனவும் நினைக்கிறார், ரேவந்த் ரெட்டி. ஆனால், ரேவந்த் ரெட்டியின் இந்த திட்டத்துக்கு, தற்போது அமைச்சர்களாக உள்ளவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 'கட்சியில் அனுபவம் வாய்ந்த பல தலைவர்கள் இருக்கும் போது, அனுபவம் இல்லாத ரேவந்த் ரெட்டியை மேலிடம் முதல்வராக்கியது. இதை பெரிய மனதுடன் ஏற்றுக் கொண்டோம். 'இப்போது எங்களுக்கே கடிவாளம் போடப் பார்க்கிறாரா; அது எந்த காலத்திலும் நடக்காது. வேண்டுமானால் முதல்வர் பதவிக்கு வேறு யாரையாவது நியமியுங்கள்...' என, கொடி பிடிக்கின்றனர், மூத்த அமைச்சர்கள்.தெலுங்கானா மக்களோ, 'ரேவந்த் ரெட்டியின் திட்டம் விஷப் பரீட்சை தான்...' என்கின்றனர்.
05-Jan-2025
02-Jan-2025