உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / குடும்பத்துடன் சிறையா?

குடும்பத்துடன் சிறையா?

'தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சிகளை இப்படி பழி வாங்கலாமா...?' என கோபத்துடன் கேட்கிறார், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும், பீஹார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ். பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது; இங்கு, அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் சார்பில், அந்த கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ரப்ரி தேவி, மகனும், முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நேரம் பார்த்து, ஏற்கனவே உள்ள ஒரு வழக்கில் இவர்கள் மூவருக்கும் எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது. மத்தியில், காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி நடந்தபோது, லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்தார். அப்போது, ரயில்வே நிலங்களை முறைகேடாக விற்றது தொடர்பாக, லாலு, அவரது மனைவி, மகன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தான், தற்போது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதனால், இவர்கள் மூவரும் சி.பி.ஐ.,யின் விசாரணை வளையத்துக்குள் சிக்கவுள்ளனர். அதிர்ச்சி அடைந்துள்ள லாலு குடும்பத்தினர், 'தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கலாம் என பார்த்தால், குடும்பத்துடன் சிறையில் தள்ளி விடுவர் போலிருக்கிறதே...' என, புலம்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை