உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / வாங்கி கட்டுவதே வேலை!

வாங்கி கட்டுவதே வேலை!

'ஹிந்துக்கள் மீது இவருக்கு அப்படி என்ன வெறுப்பு என்று தெரியவில்லையே...' என, கர்நாடக முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சித் தராமையா பற்றி எரிச்சலுடன் கூறுகின்றனர், பா.ஜ.,வினர். நாட்டில் உள்ள மூத்தஅரசியல்வாதிகளில் ஒருவரான சித்தராமையா, சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக பேசுவதை வழக்கமாக வைத்துள்ளார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், 'ஹிந்து மதத்தில் சமத் துவ மின்மை நிலவு கிறது. அதனால் தான், அந்த மதத்தில் இருந்து குறிப்பிட்ட சில சமூகங்களைச் சேர்ந்தவர்கள்,வேறு மதத்துக்கு மாறுகின்றனர். 'மதம் மாறும்படி, யாரும், யாரையும் கட்டாய ப்படுத்துவது இல்லை. தாங்களாகவே முன் வந்து மதம் மாறுவது மக்களின் உரிமை; இதை வைத்து யாரும் அரசியல் செய்யக் கூடாது...' என்றார். சித்தராமையாவின் பேச்சுக்கு, பா.ஜ., தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அந்த கட்சியின் மூத்த தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான அசோக், 'எல்லா மதத்திலும் ஏற்றத்தாழ்வுகள் உள்ளன. அதற்காக, ஹிந்து மதத்தை மட்டும் குறிப்பிட்டு விமர்சிப்பது, சித்தராமையா வின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தி உள்ளது. 'சித்தராமையாவுக்கு துணிச்சல் இருந்தால், சிறுபான்மை மதங்களில் உள்ள பிரச்னைகளையும், ஏற்றத்தாழ்வுகளையும் விமர்சித்து பார்க்கலாமே...' என, ஆவேசத்துடன் தெரிவித்தார். காங்., தலைவர்களோ, 'வாயை கொடுத்து வாங்கி கட்டுவதே சித்தராமையாவுக்கு வேலையாக போய் விட்டது...' என, புலம்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

KOVAIKARAN
செப் 18, 2025 08:59

சிறுபான்மையினர்களின் ஓட்டுக்களை பெற காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகளுக்கு அவர்கள் சார்ந்திருக்கும் ஹிந்து மதத்தையும் ஹிந்து மக்களையும் கேவலமாகப் பேசுவதே வழக்கமாகிவிட்டது. இருப்பினும், சூடு, சுரனையற்ற இந்துக்கள் அவர்களுக்கே மீண்டும் மீண்டும் ஓட்டுப்போடுகிறார்கள்.