உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அக்கம் பக்கம் / யார் அந்த தலைவர்?

யார் அந்த தலைவர்?

'ஏராளமானோர் பெரும் கனவுடன் காத்திருக்கின்றனர். யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறதோ தெரியவில்லை...' என்கின்றனர், டில்லியில் உள்ள பா.ஜ., தலைவர்கள்.தற்போது, பா.ஜ., தேசிய தலைவராக உள்ள நட்டாவின் பதவிக் காலம், 2023ம் ஆண்டே முடிந்து விட்டது. இரண்டு ஆண்டுகளாக அவர் பதவி நீட்டிப்பில் உள்ளார். மத்திய அமைச்சராகவும் இருப்பதால், அவருக்கு பதிலாக புதிய தலைவரை நியமிக்க வேண்டிய கட்டாயத்தில், பா.ஜ., மேலிட தலைவர்கள் உள்ளனர். விரைவில், பா.ஜ.,வுக்கு புதிய தேசிய தலைவர் நியமிக்கப்பட உள்ளார். இதற்காக பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதுவரை பா.ஜ., தேசிய தலைவராக பெண்கள் யாரும் பதவி வகித்தது இல்லை. அந்த குறையை போக்க, கட்சி மேலிடம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஆந்திர மாநில முன்னாள் பா.ஜ., தலைவரும், அந்த மாநில முன்னாள் முதல்வர், மறைந்த என்.டி.ராமா ராவின் மகளுமான புரந்தேஸ்வரி, பா.ஜ., மகளிரணி தலைவரும், தமிழகத்தைச் சேர்ந்தவருமான வானதி சீனிவாசன் ஆகியோரில் ஒருவர் தலைவராக்கப்படலாம் என, டில்லியில் கிசுகிசுக்கப்படுகிறது.ஆனால், பா.ஜ., தொண்டர்களோ, 'யாருமே எதிர்பார்க்காத ஒருவரைத் தான் கட்சி மேலிடம் தலைவராக நியமிக்கும்...' என்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ