| ADDED : ஜூலை 01, 2024 07:54 PM
'செவ்வாயை' தாக்கும் விண்கற்கள்
ஆண்டுதோறும் 280 - 360 விண்கற்கள் பூமி மீது விழுகின்றன. 26 அடி பள்ளங்களை உருவாக்குகிறது. அதே போல செவ்வாய் கோளின் மீதும் விண்கற்கள் மோதுகின்றன. அதாவது தினமும் கூடைபந்து அளவிலான விண்கல், செவ்வாய் மீது மோதுகின்றன என சுவிட்சர்லாந்தின் ஜூரிச் பல்கலை, இங்கிலாந்தின் லண்டன் இம்பீரியல் கல்லுாரி விஞ்ஞானிகள் இணைந்து நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளனர். செவ்வாய் கோளில் நில அதிர்வு கருவியை வைத்து ஆய்வு செய்ததில், இதன் எண்ணிக்கை முன்பு கணித்ததை விட ஐந்து மடங்கு அதிகமாக உள்ளது என கண்டறிந்தனர்.தகவல் சுரங்கம்
விளையாட்டு பத்திரிகையாளர் தினம்உலகை ஒருங்கிணைப்பது விளையாட்டு. உலகில் நடக்கும் பல்வேறு வகை விளையாட்டு செய்திகளை கோடிக்கணக்கான மக்களிடம் கொண்டு சேர்ப்பவர்கள் விளையாட்டு பத்திரிகையாளர்கள். பிரான்ஸ் தலைநகர்பாரிசில் கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற போது, 1924 ஜூலை 2ல் சுவிட்சர்லாந்தில் விளையாட்டுக்கான பத்திரிகையாளர் சங்கம் தொடங்கப்பட்டது. இதன் 70வது ஆண்டு நினைவாக 1994 ஜூலை 2ல் உலக விளையாட்டு பத்திரிகையாளர்கள் தினம் தொடங்கப்பட்டது. விளையாட்டு பத்திரிகையாளர்களின் பணியை பாராட்டுவதே இத்தினத்தின் நோக்கம்.