அறிவியல் ஆயிரம்
ஆபத்தில் பாரம்பரிய இடங்கள்
சர்வதேச அளவில் கலாசார, இயற்கையுடன் கூடிய பாரம்பரிய இடங்களை தேர்வு செய்து ஐ.நா.,வின் யுனெஸ்கோ பட்டியலிட்டு வருகிறது. இதில் தற்போது உலகளவில் 1223 இடங்கள் உள்ளன. இதில் இந்தியாவை சேர்ந்த 43 இடங்கள் உள்ளன. இந்நிலையில் வெள்ளம், வறட்சி, வெப்பநிலை உயர்வு, காட்டூத்தீ உள்ளிட்ட பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளால் 2050க்குள் உலகளவில் இப்பட்டியலில் உள்ள 50 இடங்கள் அழியும் ஆபத்தில் உள்ளன என 'கிளைமேட் எக்ஸ்' நிறுவன ஆய்வு தெரிவித்துள்ளது. இதில் இந்தியாவின் இரண்டு இடங்களும் அடங்கும்.