அறிவியல் ஆயிரம்
கேட்க முடியாத ஒலிவெற்றிடத்தில் ஒலி பயணிக்க முடியாது. ஒலி பரவ மூலக்கூறுகள் (திட, திண்ம, வாயு) அவசியம். மனிதர்களால் கேட்கக்கூடிய ஒலியின் அதிர்வெண் 20 ஹெர்ட்ஸ் - 20 ஆயிரம் ஹெர்ட்ஸ். இதற்குக் குறைவான அதிர்வெண் கொண்ட ஒலி 'தாழ் ஒலி' (இன்ப்ராசோனிக்) எனவும், அதிக அதிர்வெண் கொண்ட ஒலி 'மீயொலி' (அல்ட்ராசோனிக்) எனவும் அழைக்கப்படுகிறது. இந்த இரண்டையும் மனிதர்கள் கேட்க முடியாது. ஆனால் வவ்வால், டால்பின் போன்ற விலங்குகளால் இந்த ஒலி அளவை கேட்க முடியும். ஒலியை அளக்கப் பயன்படும் அலகு 'டெசிபல்'.