அறிவியல் ஆயிரம்
விண்வெளி மைய வரலாறுபூமியில் இருந்து 433 - 422 கி.மீ., உயரத்தில் சர்வதேச விண்வெளி மையம் அமைந்துள்ளது. இது 1998 நவ. 20ல் விண்வெளியில் ஏவப்பட்டது. நீளம் 358 அடி, அகலம் 239 அடி. எடை 4.19 லட்சம் கிலோ. 90 நிமிடத்துக்கு ஒருமுறை பூமியை சுற்றுகிறது. வேகம் மணிக்கு 27,600 கி.மீ. ஆறு பெட்ரூம் வீட்டை விட பெரியது. 6 துாங்கும் பகுதி, 2 பாத்ரூம், ஜிம், 360 டிகிரி பார்க்கும் வசதி உள்ளன. 8 சோலார் பேனலில் 75 - 90 கிலோவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 2000 நவ. 2ல் மூன்று விஞ்ஞானிகள் கொண்ட முதல் குழு விண்வெளி மையத்தில் தங்கி ஆய்வை தொடங்கியது.