அறிவியல் ஆயிரம்
இலை நிறங்கள் வேறுபடுவது ஏன் இலைகளில் குளோரோபில், கரோட்டின், அந்தோசயனின் நிறமிகள் உள்ளன. இவையே இலையின் நிறங்களுக்கு காரணம். அனைத்து தாவரங்களும் குளோரோபில் (சூரியஒளியை உறிஞ்சுதல்) மூலமே உணவு தயாரிக்கின்றன. இதில் பச்சை நிறம் அதிகம் இருப்பதால், பொதுவாக தாவரங்கள் பச்சை நிறத்தில் காணப்படும். இலையுதிர் காலம், பகல் வெளிச்சம், வெப்பநிலை குறைதல் உள்ளிட்ட சூழல்களில் குளோரோபில் மறையும். இதனால் ஏற்கனவே இலையில் இருக்கும் கரோட்டின் நிறமியால் மஞ்சள், ஆரஞ்சு, அந்தோசயனின் நிறமியால் சிவப்பு, பழுப்பு நிறங்களில் இலைகள் காணப்படும்.