அறிவியல் ஆயிரம்
பூமியை காக்கும் கரப்பான்பூச்சி இனத்தை சேர்ந்தது கரப்பான் பூச்சி. இதில் 4600 வகைகள் உள்ளன. இதன் ரத்தத்தில் ஹீமோகுளோபின் இல்லாததால் வெண்மை நிறத்தில் இருக்கும். இவை வீடுகளில் மட்டுமல்ல, காடுகளிலும் வாழ்கின்றன. சிலவகை கரப்பான் பூச்சியின் நீளம் 8 செ.மீ., எடை 35 கிராம் இருக்கும். இந்நிலையில் இவை முற்றிலும் அழிந்து விட்டால் காடுகளின் வளம் குறைதல், பறவைகள், பல்லி, தவளை உள்ளிட்ட உயிரினங்களுக்கு உணவு பற்றாக்குறை, வயல்களின் மண் தரம் குறைவு உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.