உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் :தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம் :தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம்பாதை மாற்றும் போதைபோதை பொருட்கள் மனிதனின் உடல் நலத்தை மட்டுமல்ல, மன நலத்தையும், சமூகத்தையும் பாதிக்கிறது. இருப்பினும் இதன் பயன்பாடு உலகளவில் அதிகரிக்கத்தான் செய்கிறது. இந்நிலையில் அமெரிக்காவில் அதிகபட்ச போதைபொருள் பயன்பாட்டினால் 2011 - 2021 என பத்தாண்டுகளில் மட்டும் 3.21 லட்சம் குழந்தைகள் தங்களது பெற்றோரை (18 - 64 வயதுக்கு உட்பட்டவர்கள்) இழந்தனர் என அந்நாட்டின் தேசிய போதைப்பொருள் தடுப்பு ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. இது போன்ற ஆய்வு அமெரிக்காவில் முதன்முதலாக நடத்தபட்டது.தகவல் சுரங்கம்தேசிய தொழில்நுட்ப தினம்இந்தியா 1998 மே 11, மே 13ல், ராஜஸ்தானின் பொக்ரானில் நடத்திய அணுகுண்டு சோதனைகள் வெற்றி பெற்றன. உலகின் அணு ஆயுத நாடுகளின் பட்டியலில் ஆறாவது நாடாக இணைந்தது. இச்சாதனையை அங்கீகரிக்கும் விதமாக இந்நாள் தேசிய தொழில்நுட்ப தினமாக அறிவிக்கப்பட்டது. அறிவியல், தொழில்நுட்ப துறையில் நாட்டின் சாதனைகளை அங்கீகரிப்பது, புதிய தொழில்நுட்பங்களை உருவாக்குவது, மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்துதல் இத்தினத்தின் நோக்கம். இன்று பல்வேறு தொழில்நுட்பங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை