அறிவியல் ஆயிரம் : சூடாகும் கடல் நீர்
அறிவியல் ஆயிரம்சூடாகும் கடல் நீர்உலகளவில் கடல்நீர் வெப்பநிலை கடந்த 40 ஆண்டுகளில் நான்கு மடங்கு அதிகரித்துள்ளது என ஆய்வு தெரிவித்துள்ளது. 1980க்கு முன் ஒவ்வொரு பத்தாண்டுக்கு 0.06 டிகிரி செல்சியஸ் என உயர்ந்த வெப்பநிலை, தற்போது 0.27 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் அதிகரித்து வருகிறது. இந்நிலை தொடர்ந்தால் கடந்த 40 ஆண்டுகளில் உயர்ந்த கடல்நீர் வெப்பநிலை, அடுத்த 20 ஆண்டுகளிலேயே எட்டி விடும். கார்பன் வெளியீடு அளவை பூஜ்யம் நிலைக்கு கொண்டு வருவது ஒன்று தான், கடல்நீர் வெப்பநிலையை குறைப்பதற்கான வழி என தெரிவித்துள்ளனர்.