| ADDED : ஜன 31, 2024 06:05 PM
அறிவியல் ஆயிரம்நான்கு கிரகணம்சூரியன் - பூமி - நிலவு நேர்கோட்டில் வரும்போது சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு இருப்பின், அதன் நிழல் சூரிய ஒளிக்கதிர் பூமி மீது விழுவதை மறைப்பதால் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அதேபோல சூரியன் - நிலவு இடையே பூமி வரும்போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது. இதில் முழு, பகுதி, வளைய என வகைகள் உள்ளன. இந்தாண்டு இரண்டு சூரிய கிரகணம் (ஏப். 8, அக். 2), இரண்டு சந்திர கிரகணம் (மார்ச் 25, செப். 18) நிகழ்கிறது. ஏப். 8ல் நிகழவுள்ள இந்தாண்டின் முதல் சூரிய கிரகணம் (முழு) ஐரோப்பா, அமெரிக்கா, அட்லாண்டிக், ஆர்டிக் பகுதிகளில் தெரியும்.தகவல் சுரங்கம்கடலோர காவல்படை தினம்இந்திய கடலோர பாதுகாப்பை உறுதி செய்வதில் கப்பல்படைக்கு உதவும் விதமாக 1977 பிப். 1ல் கடலோர காவல்படை உருவாக்கப்பட்டது. கப்பல்படையுடன் இணைந்து செயல்படுகிறது. இதன் தலைமையகம் டில்லி. இது தவிர மும்பை, சென்னை, கோல்கட்டா, போர்ட் பிளேர், காந்திநகரில் மண்டல தலைமையகங்கள் உள்ளன. கப்பல், ரோந்து படகு, போர் விமானங்கள் இப்படையிடம் உள்ளன. 20 ஆயிரம் வீரர்கள் பணியாற்றுகின்றனர். கடலோர காவல் படையினரின் அர்ப்பணிப்பை பாராட்டும் விதமாக பிப். 1ல் கடலோர காவல்படை தினம் கடைபிடிக்கப்படுகிறது.