உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம்சூரியனை சுற்றும் பூமிபூமி உட்பட அனைத்து கோள்களும், சூரியனைச் சுற்றி வருகின்றன என்ற உண்மையைக் கண்டறிந்து 1616ம் ஆண்டில் உலகிற்கு தெரியப்படுத்தியவர் 'கலிலியோ கலிலி'. ஆனால் அவர் கூறியதை உண்மை என யாரும் அப்போது நம்பவில்லை. பின்னர் கலிலியோவின் கூற்று உண்மைதான் என உலகம் உணர்ந்தது. அவரது பிறந்த தினம் இன்று. இத்தாலியில் பிப். 15ல் பிறந்தார். கணிதப் பேராசிரியரான அவர் இயற்பியல், வானவியலில் அதிக ஆர்வம் கொண்டு இருந்தார். வானியல் ஆய்வுகளுக்குப் பயன்படுகிற தொலைநோக்கியை (டெலஸ்கோப்) முதன் முதலில் கண்டுபிடித்தார்.தகவல் சுரங்கம்நீளமான இயற்கை குகைஇந்தியாவின் நீளமான இயற்கை குகைகளில் ஒன்று போரா. இது ஆந்திராவின் அலுரி சீதாராமா ராஜூ மாவட்டத்தில் அரக்கு பள்ளத்தாக்கில் உள்ள ஆனந்தகிரி மலைத்தொடரில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 2313 அடி உயரத்தில் உள்ளது. குகையின் ஆழம் 260 அடி. நீளம் 660 அடி. லட்சக்கணக்கான ஆண்டுக்கு முன் கோஸ்தனி ஆறு உருவாகிய போது இக்குகை தோன்றியது. குகைக்குள் இயற்கையாக உருவான பல்வேறு வடிவங்கள் உள்ளன. குகைக்குள் சராசரி வெப்பநிலை 16 டிகிரி செல்சியஸ். இதன் அருகிலுள்ள (80 கி.மீ.,) விமான, ரயில் நிலையம் விசாகபட்டினம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !