உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம்ரத்ததானம் எப்படிதானத்தில் சிறந்தது ரத்ததானம் என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர். இது பாதிக்கப்பட்டவரை காப்பாற்ற உதவுகிறது. ரத்ததானம் வழங்கும் போது எடுக்கும் ரத்தம் ஒரே இடத்தில் இருந்து மட்டும் செல்லாது. ரத்தம் என்பது உடலில் சுற்றும்படியான அமைப்பில் உள்ளது. மூளை, இதயம் போன்ற உடல் உறுப்பு போல திரவ வடிவ உறுப்பு ரத்தம். இது சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், ரத்தத் தட்டுகளை பிளாஸ்மா திரவத்தில் அடக்கி உள்ளது. உடலில் சராசரியாக 5 லிட்டர் ரத்தம் இருந்தாலும், 250 மி.லி., முதல் 350 மி.லி. தான் தானமாக பெறப்படும். இதுவும் மூன்று வாரத்தில் ஊறி விடும்.தகவல் சுரங்கம்பெரிய பாலுாட்டி உயிரினம்பாலுாட்டி உயிரினங்களில் பெரியது நீலத்திமிங்கலம். இதன் அதிகபட்ச நீளம் 98 அடி. அதிகபட்ச எடை 1.99 லட்சம் கிலோ. இது எடை அடிப்படையிலும் உலகில் வாழும் உயிரினங்களில் பெரியது. இதன் ஆயுட்காலம் 80 - 90 ஆண்டுகள். இது மணிக்கு 5 - 30 கி.மீ., வேகத்தில் செல்லும். உணவை விழுங்குவதற்கு இதன் வாய் 80 டிகிரி கோணம் அளவில் திறக்கும். ஒரே நேரத்தில் 2.20 லட்சம் லிட்டர் தண்ணீரை குடிக்கும். அதிகரித்த கப்பல் போக்குவரத்து, கடல் மாசுபாடு, பருவநிலை மாற்றம் உள்ளிட்டவை காரணமாக இந்த இனங்கள் அழியும் உயிரினங்கள் பட்டியலில் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை