அறிவியல் ஆயிரம் : பாதிப்பில் கடல்வாழ் உயிரினங்கள்
அறிவியல் ஆயிரம்பாதிப்பில் கடல்வாழ் உயிரினங்கள்பூமியில் அரிதாக கிடைக்கும் சில கனிமங்கள், தாதுக்கள் கடல்பரப்பில் உள்ளன. இதில் கோபால்ட், மாங்கனீசு, நிக்கல், மோனசைட் உள்ளிட்டவை அடங்கும். இதை வெட்டி எடுப்பதன் காரணமாக கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படும். மேலும் இவை உருவாக பல ஆயிரம் ஆண்டுகள் ஆகியது என்பதால், இதை மீட்டெடுப்பதும் கடினம் என பசிபிக் பெருங்கடலில் 16 ஆயிரம் அடி ஆழத்தில் நடத்திய ஆய்வு எச்சரித்துள்ளது. கடல் பரப்பில் இந்த அரிதான தனிமங்களை எடுத்து விட்டால் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும். இது கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளனர்.