அறிவியல் ஆயிரம்: விவசாயத்தின் காவலன்
அறிவியல் ஆயிரம்விவசாயத்தின் காவலன்விவசாயிகளின் நண்பன் என மண்புழு அழைக்கப் படுகிறது. இவை நிலத்தில் வாழும் 'அனெலிடா' வகையை சேர்ந்த முதுகெலும்பு இல்லாத உயிரினம். இவை தாவர கழிவுகளை உண்டு மண்ணை வளப்படுத்துகின்றன. இதனால் இவை விவசாயத்துக்கு ஏற்ற உயிரினமாக உள்ளது. மண்புழுக்கள், மண்ணைத் துளைத்துச் செல்லும்போது மண்ணில் காற்றோட்டம் அதிகமாகிறது. தண்ணீரும் மண்ணுக்குள் தங்குவதற்கு ஏற்றச் சூழல் உருவாகிவிடுகிறது. இதனால் தாவரங்களின் வேர்களுக்கு ஏற்ற சத்துகளும் நீரும் காற்றும் கிடைக்கிறது.