அறிவியல் ஆயிரம் : எல்லையற்றது வானம்
அறிவியல் ஆயிரம்எல்லையற்றது வானம்அறிவியல் படி வானம் என்ற ஒன்று இல்லை. ஏனெனில் இதில்தான் வளிமண்டலம், விண்வெளி அடங்கியுள்ளன. பிரபஞ்சத்தில் உள்ள பூமி உட்பட அனைத்தும் சேர்ந்தது தான் விண்வெளி. எனவே விண்வெளிக்கு ஆரம்பம், முடிவு இல்லை. விண்வெளிக்கு செல்லும்வாகனம் விண்கலம், மனிதர் விண்வெளி வீரர் எனப்படுகின்றனர். 1905ல் உருவான சர்வதேச வானுார்தி அமைப்பு, பூமியில் இருந்து 100 கி.மீ., உயரத்தை பூமியின் வளிமண்டலம் - விண்வெளி எல்லை என மதிப்பிட்டுள்ளது. விஞ்ஞானி கார்மன் உருவாக்கியதால் இது கார்மன் கோடு என அழைக்கப்படுகிறது.