அறிவியல் ஆயிரம் : வண்ண ஒளி விளக்குகள்
அறிவியல் ஆயிரம்வண்ண ஒளி விளக்குகள்எல்.இ.டி., தொழில்நுட்பம் மின்விளக்கு, லேப்டாப், அலைபேசி, பிரிட்ஜ், டார்ச் லைட் பல பொருட்களில் பயன்படுகிறது. எந்தவிதமான குறைமின்கடத்தி வேதிப் பொருட்களைக் கொண்டு எல்.இ.டி., பல்புகள் தயாரிக்கப்படுகிறதோ,அதை பொறுத்தே அவை வெளியிடும் நிறங்களும் அமையும். அலுமினியம், காலியம், இண்டியம், பாஸ்பேட் கலந்து தயார் செய்யும் எல்.இ.டி., பல்புகள் அதன் கலவை விகிதத்தை பொறுத்து சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் ஒளியை உமிழ்கின்றன. இண்டியம், காலியம், நைட்ரைடு கலவை கொண்டு பச்சை, நீலம், வெள்ளை நிற ஒளி உமிழும் பல்பு தயாரிக்கப்படுகிறது.