அறிவியல் ஆயிரம் : புலி தப்புவது எப்படி..
அறிவியல் ஆயிரம்புலி தப்புவது எப்படி...மனிதர்களைப்போல விலங்குகளுக்கு நிறங்கள் துல்லியமாக தெரியாது. பெரும்பாலான விலங்குகளுக்கு கருப்பு வெள்ளையாகத்தான் காட்சி புலப்படும். இந்நிலையில் புலி, வரிக்குதிரை உள்ளிட்ட விலங்குகள் தங்களது உடலில் உள்ள கோடுகளை வைத்து, எதிரிகளிடம் இருந்து தப்புகின்றன. அதாவது புலிகளின் கோடுகள் மூலம் அவற்றின் உருவம் முழுமையாகத் தென்படாது. அதனால் புலியை விரைவில் காணமுடியாது. புலிகள் புல்வெளியில் நடந்து செல்லும்போது அதன் கோடுகள், எதிரி விலங்குகளுக்கு புற்களின் நிழல் போன்ற தோற்றம் தரும். இதனால் புலி எளிதில் தப்பி விடுகிறது.