உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / அறிவியல் ஆயிரம் / அறிவியல் ஆயிரம்:தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம்:தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம்குறையும் மக்கள்தொகைஉலக மக்கள் தொகையில் இந்தியா, சீனா முதல் இரண்டு இடத்தில் உள்ளன. இந்நிலையில் உலகில் 93 சதவீத நாடுகளில் 2100ல் மக்கள்தொகை குறைந்தளவில் இருக்கும் என கருவுறுதல் சங்கங்களின் சர்வதேச கூட்டமைப்பு ஆய்வில் எச்சரிக்கப்பட்டுள்ளது. சில நாடுகளில் 2017ல் இருந்த மக்கள்தொகை எண்ணிக்கை 2100ல் பாதியாக குறையும். 93% நாடுகளில் இறப்பவர்களை விட, பிறப்பு எண்ணிக்கை குறைவாக இருக்கும். உதாரணமாக பிரிட்டனில் 1970ல் சராசரி கருவுறுதல் விகிதம் 2.1. இது 2022ல் 1.87 என குறைந்தது. 2100ல் 1.67 ஆக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.தகவல் சுரங்கம்உலகின் பெரிய பூங்காஉலகின் பெரிய தேசியப்பூங்கா கிரீன்லாந்தில் உள்ளது. உலகில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் பெரியதும் இதுதான். 1974ல் தொடங்கப்பட்டது. 1988ல் விரிவுபடுத்தப்பட்டது. இதன் பரப்பளவு 9.72 லட்சம் சதுர கி.மீ. டென்மார்க்கில் உருவாக்கப்பட்ட முதல் தேசியப்பூங்கா, கிரீன்லாந்தில் உள்ள ஒரே பூங்கா இதுதான். இப்பூங்காவில் துருவக்கரடி, கத்துாரி எருது, பனிக்கடல் யானை, துருவ நரி, கிரீன்லாந்து ஓநாய், திமிங்கலம், நீர்நாய், மரநாய், துருவ முயல் உள்ளிட்ட விலங்குகள் வாழ்கின்றன. 500 வகை பறவை இனங்கள் வசிக்கின்றன. இங்கு மக்கள் யாரும் நிரந்தரமாக வசிப்பதில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி