அறிவியல் ஆயிரம் : புகையா... நீராவியா...
அறிவியல் ஆயிரம்புகையா... நீராவியா...கண்ணாடி டம்ளரில் ஐஸ் கட்டியைப் போட்டு வெளியே வைத்தால் அந்த டம்ளரின் வெளியே நீர்த்துளிகள் திரண்டிருக்கும். காற்றில் உள்ள நீராவி, ஐஸ் நிரம்பிய டம்ளரில் பட்டுக் குளிர்ந்து திரவ நிலையை அடைவதால்தான் இந்த நீர்த்திவலைகள் தோன்றுகின்றன. அதே போல நம் வாயிலிருந்து கொஞ்சம் ஈரப்பதத்துடன் காற்று வெளியே வரும்போது அதில் உள்ள நீராவி கடும் குளிரில் குளிர்ந்து திரவமாக மாறி நுண் திவலைகளாக உருவாகும். அதுதான் புகை போல, நம் கண்ணுக்கு தென்படுகிறது. அந்தப் புகை என்பது மிக நுண்ணிய நீர்த்திவலைகளின் தொகுப்பு.