| ADDED : ஜன 22, 2024 07:32 PM
அலைகள் உருவாவது எப்படிகடலில் அலைகள் ஏற்படுகிறது. ஆனால் ஏரி, குளங்களில் அதுபோல ஏற்படுவதில்லை. நிலவின் ஈர்ப்பு விசையால் கடலில் அலைகள் தோன்றுகின்றன. ஈர்ப்பு விசையால் நீர் ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு இடம்பெயர்வதே அலைகள். அலைகள் வீசும் வேகம், காலம், தொலைவை பொறுத்து அலையின் உயரம் அமைகிறது. கடலில் நீண்ட தொலைவுக்கு காற்று வீசுவது போல, ஏரி, குளங்களில் காற்று வீசுவதில்லை. அதுமட்டுமன்றி கடலோடு ஒப்பிடும்போது, ஏரி நீரின் பரப்பும் கனஅளவும் குறைவாக இருப்பதால் அலைகள் ஏற்படுவதில்லை.தகவல் சுரங்கம்
பராக்கிரம தினம்சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இவரது பிறந்த தினம் மத்திய அரசு சார்பில் 'பராக்கிரம தினமாக' கடைபிடிக்கப்படுகிறது. 1897 ஜன. 23ல் ஒடிசாவின் கட்டாக்கில் பிறந்தார். சுதந்திரப் போராட்டம் மீதான ஈடுபாட்டால், உயரிய சிவில் சர்வீஸ் பணியை ஒரே ஆண்டில் ராஜினாமா செய்தார். நாட்டுக்காக 11 முறை சிறை சென்ற இவரது வாழ்வில், 20 ஆண்டுகள் சிறையிலேயே கழிந்தன. மக்களிடம் விடுதலை உணர்வை ஏற்படுத்திய இவர் இந்திய தேசிய ராணுவப் படையை உருவாக்கி ஆங்கிலேயரை எதிர்த்து போராடினார்.