மேலும் செய்திகள்
தேசியம் போற்றும் தெய்வீக நாளேடு தினமலர்
19-Feb-2026
மக்களின் மனங்களை தினமும் மலர வைக்கின்ற தினமலரின் கோடிக்கணக்கான வாசகர்களின் நானும் ஒருவன். 75ம் ஆண்டில் கால் பதிக்கும் மலருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அன்புக்கு அழகு அறிவு. அறிவுக்கு அழகு ஒழுக்கம். ஒழுக்கத்திற்கு அழகு படிப்பு. படிப்பிற்கு அழகு வேலை. வேலைக்கு அழகு சம்பளம். சம்பளத்திற்கு அழகு சேமிப்பு. சேமிப்பிற்கு அழகு கொடை. கொடைக்கு அழகு கருணை. கருணைக்கு அழகு அருள். அருளுக்கு அழகு ஆண்டவன். ஆண்டவனுக்கு அழகு பக்தி. பக்திக்கு அழகு அன்பு. அன்புக்கு அழகு அறிவு. அக அன்பும் அறிவும் சேர்ந்ததுதான் ஆன்மீகம். இந்த அன்பையும் அறிவையும் தருவது தினமலர். நான் தினமலரை அதிகமாக நேசிக்கிறேன். காரணம் ஸ்வீட், காரம், காபி என அனைத்து சுவைகளும் இதில் அடங்கியுள்ளன. மரங்களில் மூன்று வகை உண்டு. பாதிரி மரம்-இது பூக்கும் ஆனால் காய்க்காது. பலா மரம்-இது காய்க்கும் ஆனால் பூக்காது. மாமரம்-இது பூக்கும், காய்க்கும், பழுக்கும். மாமரம் போன்று தினமும் காய்த்து, பூத்து குலுங்குகின்றது தினமலர். நான் மகாகவி பாரதியை அதிகமாக நேசிக்கிறேன். காரணம் முதியவர்களின் அறிவு, நடுத்தர வர்க்கத்தினரின் மதி நுட்பம், இளைஞர்களின் உற்சாகம், குழந்தைகளின் இதயம், இவை அனைத்தும் பாரதியின் பாடல்களின் எதிரொலிக்கும். பாரதி சொன்னது போல இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே தினமும் பூக்கின்ற மலர் தினமலர். நீதியரசர் எம். கற்பகவிநாயகம் முன்னாள் தலைமை நீதிபதி, ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம்
19-Feb-2026