மேலும் செய்திகள்
தேசியமும், துணிச்சலும் 'தினமலரின் இரு கண்கள்
25-Oct-2025
'தினமலர்' ஒவ்வொரு குடும்பங்களுக்கான நாளிதழ். ஒரு பத்திரிகையைப் பார்த்தவுடன் எடுத்துப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை துாண்டுவது அதன் வடிவமைப்பும், எழுத்துக்களின் அளவும்தான். அப்படிப் பார்க்கும்போது எல்லா நாளிதழ்களிலும் முதன்மையானது 'தினமலர்' மட்டுமே. 'தினமலர்' படித்து முடித்தவுடன், காலையிலேயே அனைத்து செய்திகளையும் உண்மையாக, நேர்மையான முறையிலே தெரிந்து கொண்ட திருப்தி கிடைக்கும். குறிப்பாக, டீக்கடை பெஞ்ச் சுவாரஸ்யமாக இருக்கும். அனைத்து விதமான செய்திகளையும், நடுநிலையோடு எவ்வித சமரசமுமின்றி, சரியாக, தரமாக வெளியிடுவதில், 'தினமலர்' நாளிதழுக்கு நிகரான பத்திரிக்கை எதுவும் இல்லை. நமக்கும், நாட்டுக்கும் பயன்படாத செய்தி என்று எதுவுமே, 'தினமலர்' நாளிதழில் இருக்காது. அனைத்து செய்திகளையும் நாகரீகமான முறையில் வெளியிடுவதில், தினமலருக்கு நிகர் தினமலரே. சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவராலும் விரும்பிப் படிக்க முடிகிறது. குறிப்பாக, அரசியல் செய்திகளை கட்சி பாகுபாடு இன்றி வெளியிடும் 'தினமலர்', ஒரு சாதாரண மனிதரால் சொல்ல முடியாத, பகிர்ந்துகொள்ள முடியாத எத்தனையோ கருத்துக்களை, நம் மனதின் குரலாக 'தினமலர்' வெளிப்படுத்தும்போது பெரிய மகிழ்ச்சி கிடைக்கிறது. எனக்கு 'தினமலர்' வெளியிடுகின்ற, வாரமலர் படிக்க ரொம்ப பிடிக்கும். சமூக ஊடகங்கள் பல இருந்தாலும் வாரமலரில் வரும் பா.கே.ப., குறுக்கெழுத்துப் போட்டி, சின்ன சின்ன துணுக்குகள், ஒரு பக்கக் கதை, புரியாத புதிர் போன்ற பகுதிகள், நம்மை ஒரு மணி நேரத்தை மறக்கச் செய்துவிடும். எனக்கு ஆன்மிகத்திலும், ஜோதிடத்திலும் மிகுந்த ஈடுபாடு உண்டு. 'தினமலர்' வெளியிடுகின்ற ஆன்மிக மலரை, நான் விரும்பிப் படிப்பதுண்டு. என்னைப் பொறுத்தவரை, எல்லோரும் மரியாதையோடும், ஆர்வத்தோடும் படிக்கும் நாளிதழ் 'தினமலர்' என்பேன். 75வது பவள விழாவை நோக்கி மட்டுமல்ல, மேலும் பல்லாண்டு 'தினமலர்' பயணம் தொடரும். அதற்கான பயணத்தில் கடவுள் என்றும் துணை நிற்க வேண்டும் என மனதார விரும்புகிறேன். வாழ்த்துக்கள். என்றென்றும் அன்புடன், எஸ்.மலர்விழி தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்கள், கோவை
25-Oct-2025