மேலும் செய்திகள்
தினமலர் செய்தி; ஒளிர்ந்தது விளக்கு
03-Oct-2025
திருத்தணி மருத்துவமனை கழிப்பறைகள் பளிச்
26-Sep-2025
படப்பை மேம்பாலத்தில் தார் சாலை அமைப்பு
26-Sep-2025
சேத்துப்பட்டு:நம் நாளிதழில் வெளியான செய்தியை அடுத்து, மின் மாற்றியில் அத்துமீறி காய வைக்கப்பட்ட துணிகள் அகற்றப்பட்டு, வடமாநில நபர்களை அதிகாரிகள் எச்சரித்தனர். சென்னை, அண்ணா நகர் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் சேத்துப்பட்டு, எம்.சி.நிக்கோலஸ் சாலை உள்ளது. சேத்துப்பட்டு ரயில் நிலையம் அருகில் உள்ள இச்சாலையில், சென்னையின் பல்வேறு பகுதியில் பிச்சையெடுக்கும் வடமாநில நபர்கள், சாலையோரங்களில் தங்கி வசிக்கின்றனர்.இவர்கள் ஆபத்தை உணராமல், அங்குள்ள உயரழுத்த மின்மாற்றியில், ஈரத்துணிகளை காய வைத்தனர். இதனால், மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு ஏற்படும் அபாயம் நிலவியது.இது தொடர்பாக, மின்வாரிய அலுவலகத்தில் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது.இதையடுத்து, மின் மாற்றியில் காய வைக்கப்பட்ட துணிகள் மற்றும் கயிறுகளை, மின் வாரியத்தினர் அகற்றினர்.பின், துருப்பிடித்த மின்மாற்றிக்கு வண்ணம் பூசி சீரமைத்து, அத்துமீறலில் ஈடுபட்ட வடமாநிலத்தவர்களை, மின்வாரியத்தினர் எச்சரித்தனர்.
03-Oct-2025
26-Sep-2025
26-Sep-2025