உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / தினமலர் செய்தி எதிரொலி; நான்கு வழிச்சாலை சீரமைப்பு

தினமலர் செய்தி எதிரொலி; நான்கு வழிச்சாலை சீரமைப்பு

திருப்புவனம்: மதுரை -- பரமக்குடி நான்கு வழிச்சாலையில் போதிய பராமரிப்பு இல்லாததால் வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்கி காயமடைந்து வருவதாக தினமலர் இதழில் படத்துடன் செய்தி வெளியானதை அடுத்து நேற்று சாலையோர பள்ளம் சீரமைக்கப்பட்டது.மதுரையில் இருந்து பரமக்குடி வரை செல்லும் நான்கு வழிச்சாலை சாலையை பயன்படுத்தும் வாகனங்களுக்கு திருப்பாச்சேத்தி, போகலுார் ஆகிய இடங்களில் டோல்கேட் மூலம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. 2018 முதல் சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில் நான்கு வழிச்சாலையில் போதிய பராமரிப்பு செய்வது இல்லை.நான்கு வழிச்சாலையில் மணலூர் மேம்பாலம் இறங்கும் இடம் உள்ளிட்ட பல இடங்களில் ரோடு சேதமடைந்து பள்ளமாக மாறி வருகிறது. இரவு நேரங்களில் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். தினமலரில் படத்துடன் செய்தி வெளியானதை அடுத்து பள்ளங்கள் அனைத்தும் சீரமைக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்