மேலும் செய்திகள்
தினமலர் செய்தியால் கிடைத்தது பட்டா
26-Dec-2025
ரேஷன் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு குழு
25-Dec-2025
மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மீட்பு
24-Dec-2025
தார்பாய் மூடி செல்லும் லாரிகள்
22-Dec-2025
ஆதம்பாக்கம், உள்ளகரம் - புழுதிவாக்கம் ஆகிய பகுதிகளை வேளச்சேரி - பரங்கிமலை உள்வட்ட சாலையை கடந்து, பள்ளி மாணவ - மாணவியர் சென்று வருகின்றனர். இதற்கான பிரதான வழித்தடமாக ஆதம்பாக்கம், நேரு தெரு உள்ளது.அத்தெரு சாலையில் இருந்து உள்வட்ட சாலையை பீக் ஹவர்ஸ் நேரத்தில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பிட்ட இடத்தில் சிக்னல் இல்லாததால், இப்பகுதியை கடக்க 20 நிமிடங்களுக்கு மேல் ஆனது.இதனால், பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவதாக, நம் நாளிதழில் படத்துடன் கூடிய செய்தி வெளியானது. அதன் நடவடிக்கையாக, சமீபத்தில் சிக்னல் அமைக்கப்பட்டது.ஆனால், உள்வட்ட சாலையை கடக்கும் சிக்னல் நேரம் மிகவும் குறைவாக இருந்தது. இதை மாற்ற வேண்டும் என நம் நாளிதழில் சுட்டிக்காட்டப்பட்டது. இதன் எதிரொலியாக, நேற்றில் இருந்து, இப்பகுதியில் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.மடிப்பாக்கம் போக்குவரத்து பிரிவு ஆய்வாளர் ரமேஷ் கூறியதாவது:சிக்னல் நேரத்தை மாற்றினால், மற்ற நேரங்களில் உள்வட்ட சாலையில் வாகனங்கள் தேவையில்லாமல் நின்று செல்லும்.இந்த பாதிப்பை தவிர்க்கும் வகையில், காலை 8:00 மணி முதல் 9:30 மணி வரையும், மாலை 3:30 மணி முதல் 5:00 மணிவரையும் போக்குவரத்து போலீசார், இந்த சந்திப்பில் பணியில் ஈடுபடுவர்.'ரிமோட்' வாயிலாக, சிக்னலை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, வாகனங்கள் நெரிசலின்றி செல்ல நடவடிக்கை எடுப்பர்.இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -
26-Dec-2025
25-Dec-2025
24-Dec-2025
22-Dec-2025