மேலும் செய்திகள்
தினமலர் செய்தி; ஒளிர்ந்தது விளக்கு
03-Oct-2025
திருத்தணி மருத்துவமனை கழிப்பறைகள் பளிச்
26-Sep-2025
படப்பை மேம்பாலத்தில் தார் சாலை அமைப்பு
26-Sep-2025
சிவகாசி : விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் மே 6ல் நடந்த வெடி விபத்தில் உயிரிழந்த பட்டாசு தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தினமலர் செய்தி எதிரொலியாக தமிழக அரசு சார்பில் இன்று தலா ரூ. 3 லட்சம் நிவாரணத்தொகை வழங்க உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.செங்கமலப்பட்டியில் உள்ள சுதர்சன் பட்டாசு ஆலையில் மே 9 ல் நடந்த வெடிவிபத்தில் 6 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். 9 பெண்கள் உட்பட 14 பேர் காயமடைந்தனர். உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு உரிமையாளர் சார்பில் தலா ரூ.5 லட்சம் இழப்பீடும், இறுதிச் சடங்கிற்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்பட்டது.பட்டாசு ஆலை வெடி விபத்திற்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின், தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார். சிவகாசி மருத்துவமனையில் வெடிவிபத்தில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்த அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் அரசு சார்பில் நிவாரணம் வழங்க முடியவில்லை. விரைவில் உரிய அனுமதி பெற்று நிவாரணம் வழங்கப்படும் என தெரிவித்தார்.இந்நிலையில் லோக்சபா தேர்தல் முடிந்து ஜூன் 4 ல் ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின், தேர்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்டது. ஆனால் தற்போது வரை உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கோ அல்லது காயமடைந்த தொழிலாளர்களுக்கு அரசு சார்பில் நிவாரணம் அறிவிக்கப்படவில்லை. இதனால் குடும்பத்தினர் வாழ்வாதாரத்திற்கு சிரமப்படுகின்றனர். எனவே இறந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு அரசு சார்பில் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என தினமலர் நாளிதழில் செய்தி நேற்று வெளியானது.இதன் எதிரொலியாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளால் வழங்கப்படாமல் இருந்த நிவாரணத் தொகை தலா ரூ. 3 லட்சம் உயிரிழந்த பட்டாசு தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு இன்று வழங்கப்பட உள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.
03-Oct-2025
26-Sep-2025
26-Sep-2025