மேலும் செய்திகள்
திருத்தணி மருத்துவமனை கழிப்பறைகள் பளிச்
26-Sep-2025
படப்பை மேம்பாலத்தில் தார் சாலை அமைப்பு
26-Sep-2025
சின்னசாமிநகரில் குப்பை அகற்றி சீரமைப்பு
24-Sep-2025
பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு ஒன்றியம் குமாரராஜபேட்டை கிராமம், சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள விநாயகர் கோவில் அருகே பயணியர் நிழற்குடை உள்ளது.இந்த பயணியர் நிழற்குடைக்கும், சாலைக்கும் இடையே குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளம் நீண்டகாலமாக சமன்செய்யப்படாமல் இருந்தது.இதன் காரணமாக, இப்பள்ளத்தில் செடி, கொடிகள் வளர்ந்திருந்தன. இதனால், நிழற்குடைக்குள் பயணியர் காத்திருக்க முடியாத நிலை இருந்தது.மேலும், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், எதிரில் வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு ஒதுங்கும் போது, பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கும் அபாய நிலை இருந்தது.இந்நிலையில், பயணியர் மற்றும் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி, நிழற்குடை முன் உள்ள பள்ளத்தை சீரமைத்து, முறையாக பராமரிக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்திருந்தனர்.இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, நிழற்குடை முன் இருந்த பள்ளம், மண் கொட்டி சமன் செய்யப்பட்டு, நிழற்குடை மீண்டும் பயணியரின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
26-Sep-2025
26-Sep-2025
24-Sep-2025