உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / தனுஷ்கோடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்; தினமலர் செய்தி எதிரொலி

தனுஷ்கோடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்; தினமலர் செய்தி எதிரொலி

ராமேஸ்வரம்: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.தனுஷ்கோடி அரிச்சல்முனையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை இருபுறமும் 100க்கும் மேற்பட்ட கடைகள் ஆக்கிரமித்து இருந்தன. இதனால் சுற்றுலாப் பயணிகள் நடந்து செல்லவும், வாகனங்கள் நிறுத்தி திருப்ப முடியாமல் பெரிதும் அவதிப்பட்டனர்.கலெக்டர் விஷ்னு சந்திரன் எச்சரிக்கை விடுத்தும் வியாபாரிகள் கண்டு கொள்ளவில்லை. இதுகுறித்து நேற்று தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக கலெக்டர் உத்தரவின்படி நேற்று நகராட்சி கமிஷனர் கண்ணன், தாசில்தார் வரதராஜ், டி.எஸ்.பி., உமாதேவி முன்னிலையில் அரிச்சல்முனையில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன.தனுஷ்கோடி கோதண்டராமர் கோயில் அருகில் தனியார் சிலர் சிவலிங்கம் சிலை வைத்து பக்தர்களிடம் வசூலிப்பதாக ராமேஸ்வரம் கோயில் அதிகாரி புகார் செய்தார். இதையடுத்து நேற்று சிலையை அகற்றி தாசில்தார் அலுவலகத்தில் வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை