உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / தினமலர் செய்தியால் தீர்வு

தினமலர் செய்தியால் தீர்வு

வாடிப்பட்டி : மதுரை மேற்கு ஒன்றியம் அதலை ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட சமுதாயத்தினர் வசிக்கின்றனர்.பரவை ரோட்டில் பொது மயானம் அருகே உள்ள ஆதிதிராவிடர் மயானத்தில் எரியூட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை.30 ஆண்டுகளுக்கு முன் அமைத்த தகர கொட்டகையும் சேதமடைந்திருந்தது.இதனால் மழை நேரங்களில் இறந்தவர்கள் உடலை எரிக்க சிரமப்பட்டு வந்தனர். இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக தற்போது 2 தகன மேடைகளுக்கான கட்டுமான பணி நடந்து வருகிறது.கொட்டாம்பட்டி -: கருங்காலக்குடி சார் பதிவாளர் அலுவலகத்தின் மெயின் கேட் பயன்பாடின்றி புதர் மண்டி காணப்பட்டது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக முட்செடிகள் அகற்றப்பட்டதால் பத்திர பதிவுக்கு வரும் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ