பேருந்து படியில் தொங்கிய மாணவர்கள் போலீசார் முன்னிலையில் உறுதிமொழி ‛தினமலர் செய்தி எதிரொலி
திருத்தணி:திருத்தணி டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு, திருத்தணி சுற்றியுள்ள, 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு பேருந்துகளில் வந்து செல்கின்றனர். பேருந்துகளில் காலை மற்றும் மாலையில் ஏறும் மாணவர்கள், படி, ஜன்னல் கம்பி மற்றும் கூரையில் தொங்கியவாறு ஆபத்தான பயணம் செய்கின்றனர். இதனால் பேருந்தில் செல்லும் பொதுமக்கள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் சிரமப்படுகின்றனர். இது குறித்து நம் நாளிதழில் நேற்று படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து நேற்று திருத்தணி டி.எஸ்.பி., கந்தன் உத்தரவுபடி திருத்தணி இன்ஸ்பெக்டர் மதியரசன், எஸ்.ஐ., குணசேகர் ஆகியோர் அரசு பேருந்தில் தொங்கியவாறு வந்த மாணவர்களை இறங்கி, எச்சரித்தனர்.இனிவரும் காலத்தில் பேருந்தில் ஆபத்தான பயணம் செய்ய மாட்டோம் என மாணவர்கள் போலீசார் முன்னியில் உறுதிமொழி எடுத்தனர்.