உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / ‛தினமலர் செய்தி எதிரொலி: குளம் வெட்டும் பணியில் 100 நாள் தொழிலாளர்கள்

‛தினமலர் செய்தி எதிரொலி: குளம் வெட்டும் பணியில் 100 நாள் தொழிலாளர்கள்

திருத்தணி:திருவள்ளூர் மாவட்டத்தில், 526 ஊராட்சிகளில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், 100 நாள் தொழிலாளர்கள் மூலம் குளம் வெட்டும் பணிகள் நடந்து வருகிறது. இதில், பெரும்பாலான ஊராட்சிகளில் குளம் வெட்டுவதற்கு 100 நாள் தொழிலாளர்களை பயன்படுத்தாமல், பொக்லைன் இயந்திரம் வாயிலாக குளங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. இதனால் 100 நாள் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, திருத்தணி ஒன்றியத்தில் உள்ள, 27 ஊராட்சிகளில் குளம் வெட்டுவதற்கு இயந்திரத்தை பயன்படுத்தக்கூடாது என வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அனைத்து ஊராட்சி நிர்வாகத்திற்கும் சுற்றிக்கை அனுப்பி ஊராட்சி செயலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.இது குறித்து திருத்தணி வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம் கூறியதாவது: திருத்தணி ஒன்றியத்தில் மொத்தம், 83 குளங்கள் வெட்டப்படவுள்ளன. தற்போது, கே.ஜி.கண்டிகை, அகூர், தரணிவராகபுரம் ஆகிய ஊராட்சிகளில், தலா இரு குளங்கள் வெட்டும் பணி துரித வேகத்தில் நடந்து வருகிறது. மீதமுள்ள ஊராட்சிகளில் குளம் வெட்டும் பணி படிப்படியாக நடைபெறும். இப்பணிகள் 100 நாள் தொழிலாளர்களை கொண்டு தான் செய்ய வேண்டும் என, ஊராட்சி மன்ற தலைவர்கள், செயலர்களிடம் அறிவுறுத்தியுள்ளேன். தவறும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை