உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / குண்ணவாக்கம் கூட்டுச்சாலையில் வழிகாட்டி பலகை அமைப்பு

குண்ணவாக்கம் கூட்டுச்சாலையில் வழிகாட்டி பலகை அமைப்பு

குண்ணவாக்கம்:உத்திரமேரூர் ஒன்றியம், படூர் கூட்டுச்சாலையில் இருந்து, குண்ணவாக்கம் வழியே செல்லும் நெல்வாய் கூட்டுச்சாலையை இணைக்கும் சாலை உள்ளது. இந்த சாலை குறுகியதாக இருந்ததால், அகலப்படுத்த நெடுஞ்சாலைத்துறை தீர்மானித்தது. ஒருங்கிணைந்த சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 15 கோடி ரூபாய் செலவில், 9 கி.மீ., துாரத்திற்கு கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் சீரமைப்பு பணி நடந்தது.சாலை விரிவாக்கத்திற்காக குண்ணவாக்கம் கூட்டுச்சாலையில் இருந்த வழிகாட்டி பலகை அப்புறப்படுத்தப்பட்டது. பணி முடிந்ததும் அகற்றம் செய்த அப்பலகை மீண்டும் அமைக்கப்படாமல் இருந்தது. அச்சாலை வழியாக பயணிப்போர் தங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்கான பிரிவு சாலைகள் குறித்து அறிய முடியாமல் தவித்து வந்தனர்.இதுகுறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.இதையடுத்து நெடுஞ்சாலைத்துறையினர் குண்ணவாக்கம் கூட்டுச்சாலையில் அகற்றம் செய்த வழிகாட்டி பலகை மீண்டும் நிறுவினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை