தினமலர் செய்தி எதிரொலி கழிவுநீர் பிரச்னைக்கு தீர்வு
வேளச்சேரி:நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக, வேளச்சேரி தண்டீஸ்வரம் நகரில் கழிவுநீர் தேங்கிய பிரச்னைக்கு தீர்வு கிடைத்ததுஉஅடையாறு மண்டலம், 177வது வார்டு, வேளச்சேரி, தண்டீஸ்வரம் நகர் 9வது பிரதான சாலை மற்றும் டான்சிநகர் 4வது தெரு ஆகியவை அடுத்தடுத்து தெருக்களாக உள்ளன.இங்கு, 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த தெருவில், 10 நாட்களாக இயந்திர நுழைவு வாயில் வழியாக கழிவுநீர் வெளியேறி, சாலையில் தேங்கியது. இதனால், பகுதிமக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். துர்நாற்றம் வீசியதால் முதியவர்கள், குழந்தைகளுக்கு சுவாச பிரச்னை ஏற்பட்டது. புகார் அளித்தால், நடவடிக்கை எடுக்கவில்லை என, பகுதிமக்கள் கூறினர். இது குறித்து, நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, குடிநீர் வாரிய அதிகாரிகள், பெரிய இயந்திரம் வாயிலாக, குழாய் அடைப்பை அகற்ற நடவடிக்கை எடுத்தனர். இதனால், பகுதிமக்கள் நிம்மதி அடைந்தனர்.