உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / மின்கம்பியில் படர்ந்த செடி, கொடிகள் அழிப்பு தினமலர் செய்தி எதிரொலி

மின்கம்பியில் படர்ந்த செடி, கொடிகள் அழிப்பு தினமலர் செய்தி எதிரொலி

சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் இருந்து வாலாஜாபேட்டை செல்லும் சாலையில், மேல்வெங்கடாபுரம் துணை மின்நிலையம் எதிரே, சாலையின் குறுக்கே உயரழுத்த மின்தடம் அமைந்துள்ளது. இந்த மின்தடத்திற்கு பாதுகாப்பாக, அதற்கு கீழாக கம்பி வலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கம்பி வலையில், கொடிகள் படர்ந்து, உயரழுத்த மின்கம்பிகளை தொடும் விதமாக இருந்தது. இந்த வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.மேலும், இந்த பகுதியில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலைக்கு, இரவு பகல் என எந்நேரமும் தொழிலாளர்கள், இருசக்கர வாகனங்களில் பயணித்து வருகின்றனர். மின்கம்பிக்கு பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ள வலையில் கொடிகள் படர்ந்து வருவதால், மின்விபத்து நேரிடும் அபாயம் நிலவியது. இதனால், வாகன ஓட்டிகள் அச்சத்தில் தவித்து வந்தனர். இது குறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, தற்போது அந்த கொடிகளின் வேர்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை