மேலும் செய்திகள்
சேதமான பெயர் பலகை மாற்ற நடவடிக்கை தேவை
29-Aug-2025
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷனில் 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக, புதிய பெயர் பலகை அமைக்கப்பட்டது. கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷன் முன்பாக, சர்வீஸ் ரோட்டோரத்தில் இருந்த பெயர் பலகை கடந்த சில நாட்களுக்கு முன், காற்றுடன் பெய்த மழைக்கு சேதமடைந்தது. அதன்பின் பெயர் பலகை புதுப்பிக்கப்படாமல் இருந்து. இந்நிலையில், விபத்து வழக்குகள் தொடர்பாக, வெளியூர்களிலிருந்து வருவோர் போலீஸ் ஸ்டேஷன் தெரியாமல் அவதிப்பட்டனர். இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. செய்தி எதிரொலியாக, போலீஸ் ஸ்டேஷன் முன்பாக, புதிய பெயர் பலகை அமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, இந்த ஸ்டேஷன் செல்லும் வழியில் இரவு நேரத்தில் மின் விளக்கு வசதி இல்லாமல் இருளில் தடுமாறி செல்லும் நிலை இருப்பதால், விரைவில் மின்விளக் குகள் பொருத்த வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.
29-Aug-2025