உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / செய்தி எதிரொலி / செய்தி எதிரொலி :சேதமடைந்த மின் கம்பம் மாற்றம்

செய்தி எதிரொலி :சேதமடைந்த மின் கம்பம் மாற்றம்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் பேரூராட்சி, காஞ்சிபுரம் செல்லும் சாலையோரத்தில்,மின் வாரியத்தின் மூலம்,10க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் நடப்பட்டு, மின் கம்பிகள் வாயிலாக, அப்பகுதி குடியிருப்புகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், திடக்கழிவு மேலாண்மை கிடங்கு அருகே, நடப்பட்டுள்ள மின் கம்பம் சேதமடைந்து, சிமெண்ட் பூச்சுகள் உதிர்ந்து,கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால், அப்பகுதியில் மின் விபத்து ஏற்படும் என்று,கடந்த 18ம் தேதி,நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.இதையடுத்து, மின் வாரியத்தினர்,சேதமடைந்த மின் கம்பத்தை அகற்றிவிட்டு,புதிய மின் கம்பத்தை நட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை